திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ரூ.3 கோடியில் 6 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனம்


திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு ரூ.3 கோடியில் 6 கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனம்
x

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

திருமலை,

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அந்த வாகனச் சேைவக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.3 கோடி செலவில் 6 கிலோ தங்கத்தை பயன்படுத்தி புதிதாக சூரியபிரபை வாகனத்தைத் தயாரித்துள்ளது.

புதிய தங்கச் சூரிய பிரபை வாகனத்துக்கு நேற்று முன்தினம் காலை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் ஆகியோர் சாஸ்திர பூர்வமாக பூஜை செய்தனர்.


Next Story