நாடு முழுவதும் நாளை தூய்மைப்பணி: 'தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு' பிரதமர் மோடி அழைப்பு


நாடு முழுவதும் நாளை தூய்மைப்பணி: தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 29 Sep 2023 10:15 PM GMT (Updated: 29 Sep 2023 10:15 PM GMT)

’தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை பணிகளை மேற்கொள்ளும் திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'அக்டோபர் 1-ந் தேதி (நாளை) காலை 10 மணிக்கு, ஒரு முக்கிய தூய்மை பணிக்காக நாம் ஒன்று கூடுகிறோம். ஒரு தூய்மையான இந்தியா, நம் அனைவரது பொறுப்பாகும். மேலும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்' என அழைப்பு விடுத்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் தூய்மை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். எனவே அவரது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


Next Story