அகமதாபாத் கண்காட்சியில் தமிழக சுற்றுலா அரங்கம்; அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்


அகமதாபாத் கண்காட்சியில் தமிழக சுற்றுலா அரங்கம்; அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
x

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயண சுற்றுலா கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பயண சுற்றுலா கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. 8-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை இயக்குநர் கர்ணேஷ் சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த கண்காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேபாள், துருக்கி, ஜக்கிய அரபு நாடுகள் மற்றும் 22 மாநில சுற்றுலா அரங்குகளும் அடங்கும்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா அரங்கத்தை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா தொழில் சார்ந்த பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


Next Story