காஷ்மீரில் ஏரியில் மூழ்கிய சுற்றுலாப் பயணியின் உடல் ஒரு மாதத்துக்குப் பின் மீட்பு


காஷ்மீரில் ஏரியில் மூழ்கிய சுற்றுலாப் பயணியின் உடல் ஒரு மாதத்துக்குப் பின் மீட்பு
x

காஷ்மீரில் ஏரியில் மூழ்கிய சுற்றுலாப் பயணியின் உடல் ஒரு மாதத்துக்குப் பின் மீட்கப்பட்டது.

ஸ்ரீநகர்,

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் காஷ்மீருக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றனர். அவர்களும், 3 வழிகாட்டிகளும் ஆனந்த்நாக் மாவட்டத்தின் தார்சார் ஏரியில் உள்ள தற்காலிக பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் நீர்ச்சுழல், பாலத்தின் மீது மோதியதில் அவர்கள் ஏரியில் தவறி விழுந்து மூழ்கினர். அவர்களில் டாக்டர் மகேஷ் என்ற சுற்றுலாப் பயணி, மற்றொரு வழிகாட்டியைத் தவிர மற்ற அனைவரும் மீட்கப்பட்டனர்.

வழிகாட்டியின் உடல் மறுநாள் மீட்கப்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணி டாக்டர் மகேஷின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையில் அவரது உடல் பகல்காமின் லிட்டார்வட் பகுதியில் மீட்கப்பட்டது. மருத்துவ, சட்ட நடைமுறைகள் முடிந்தபின் அந்த உடல், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story