வீரசாவர்க்கரின் பேனர் கிழிப்பு; இந்து அமைப்பினர் போராட்டம்-பரபரப்பு
ஒன்னள்ளி டவுனில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த வீரசாவர்க்கரின் பேனர் கிழிக்கப்பட்டது. இதனை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு;
வீரசாவர்க்கர் பேனர் கிழிப்பு
தாவணகெரே மாவட்டம் ஒன்னள்ளி டவுன் பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அந்த பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் சார்பில் இந்து மகா கணபதி என்ற பெயரில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனர்களில் இந்து அமைப்பை ேசர்ந்த முக்கிய பிரமுகர்களின் புகைப்படமும், வீரசாவர்க்கரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாரோ மர்மநபர்கள், வீரசாவர்க்கர் புகைப்படம் இருந்த பேனரை கிழித்துள்ளனர்.
பரபரப்பு
இதைப்பார்த்து ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீரசாவா்க்கரின் பேனரை கிழித்த மர்மநபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்னள்ளி டவுன் போலீசில் புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து ஒன்னள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது.