காஷ்மீரில் பயங்கரவாதியின் கூட்டாளி துப்பாக்கியுடன் கைது
காஷ்மீரில் பயங்கரவாதியின் கூட்டாளி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு,
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் அருகே உள்ள சல்வா மற்றும் பெஹ்ரா பகுதிகளில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது சல்வாவை சேர்ந்த தயாப் கான் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
உடனே பாதுகாப்பு படையினர் விரட்டி சென்று அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் அவரிடம் விசாரித்தபோது, அவர் பயங்கரவாதிகளின் கூட்டாளி என்பதும், பயங்கரவாத செயல்களுக்கு உதவியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story