"163வது வருமான வரி தினம்" நாடு முழுவதும் கொண்டாட்டம்!


163வது வருமான வரி தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்!
x

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஏற்பாடு செய்த 163வது வருமான வரி தின விழா, இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஏற்பாடு செய்த 163வது வருமான வரி தின விழா, இந்தியா முழுவதும் உள்ள அதன் அனைத்துக் கள அலுவலகங்களிலும் இன்று கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கள அமைப்பினர் பல நிகழ்ச்சிகளை நடத்தினர்.

வரி செலுத்துவோர் நாட்டிற்கு ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் நிகழ்ச்சிகள், வரி செலுத்துவோரைப் பாராட்டும் நிகழ்ச்சிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணினிகள் போன்றவற்றை வழங்கி கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்தல், அனாதை இல்லங்கள்/ முதியோர் இல்லங்களுக்கு துறை சார்ந்த ஊழியர்களின் தன்னார்வ அடையாள நன்கொடை அளித்தல் உள்ளிட்டவை கள அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் அடங்கும்.

ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தல், மருத்துவப் பரிசோதனை, கொரோனா-தடுப்பூசி முகாம்கள் அமைத்தல், மரம் வளர்ப்பு மற்றும் தூய்மை இயக்கங்கள் போன்றவையும், அரை மராத்தான் ஓட்டம், சைக்ளோத்தோன் போட்டி , குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எழுத்தறிவு குறித்த பலகை விளையாட்டுகள் விநியோகம், கலாச்சார நிகழ்ச்சிகள், கேலிச்சித்திர கண்காட்சி திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார மந்திரி நிர்மலா சீதாராமன் வருமான வரித்துறைக்கு அனுப்பிய செய்தியில், 'சமீபத்திய ஆண்டுகளில் அரசு அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் நம்பிக்கை அடிப்படையிலான வரி முறையை உறுதி செய்துள்ளது. வரி செலுத்துவோர் இந்த நம்பிக்கை அடிப்படையிலான அணுகுமுறையை உறுதிப்படுத்தியுள்ளது. இது மேம்பட்ட வரி வசூல் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றிலிருந்து தெளிவாகிறது.'

கொள்கை சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காகவும், வரி செலுத்துவோரை மையமாகக் கொண்ட அமைப்பாகத் தன்னை திறம்பட மறுசீரமைத்ததற்காகவும், கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.14 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியதற்காகவும் வருமான வரித்துறையை சீதாராமன் பாராட்டினார். மேலும், நடப்பு நிதியாண்டிலும் இந்தத் துறையின் உத்வேகம் தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வருமான வரித்துறை பணியாளர்கள் தேசத்திற்கான சேவையில் இதுவரை மேற்கொண்ட பயணத்தை திரும்பிப் பார்க்கவும், தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க தங்களை மீண்டும் அர்ப்பணிக்கவும் ஒரு சந்தர்ப்பமாக வருமான வரி தினம் அமைந்துள்ளது.


Next Story