தொழில்நுட்ப புரட்சி காரணமாக மக்களின் அடிப்படை தேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது - திரவுபதி முர்மு பேச்சு


தொழில்நுட்ப புரட்சி காரணமாக மக்களின் அடிப்படை தேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது - திரவுபதி முர்மு பேச்சு
x

சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநித்தில் உள்ள குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர் பேசியதாவது:-

இன்று உலகம் முழுவதும் அதிவேக மாற்றத்தில் உள்ளது. தொழில்நுட்ப புரட்சி காரணமாக வேலைவாய்ப்புகள், மக்களின் அடிப்படை தேவைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு குருஷேத்ரா என்ஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்திய வேளாண்மை மேம்பாட்டில் பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் உணவு பாதுகாப்பை இந்த மாநிலங்கள் உறுதி செய்துள்ளன. அதேசமயம் காற்று மாசு, நிலத்தடி நீர் பாதிப்பு இந்த பிராந்தியத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் சாதாரண மக்கள் தொழில்நுட்பத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சமூகத்தின் நலனுக்காக தொழில்நுட்பம் பயன்பட்டால் அதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். சமத்துவமான சமுதாயத்தை கட்டமைப்பதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story