பா.ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது-குமாரசாமி பேச்சு


பா.ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது-குமாரசாமி பேச்சு
x

பா.ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு தாசரஹள்ளியில் ஜனதா தளம் (எஸ்) கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- தேசிய கட்சிகள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை குறைத்து மதிப்பிடுகின்றன. ஆனால் மக்கள் நமது கட்சியை ஆதரிக்க விரும்புகிறார்கள். அவர்கள் மவுன புரட்சி மூலம் தேர்தலில் தங்களின் ஆதரவை வெளிப்படுத்துவார்கள். பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டை பா.ஜனதா தனது தேவைக்கு ஏற்ப மேற்கொண்டுள்ளது. ஆனால் தாசரஹள்ளி தொகுதியில் உள்ள 10 வார்டுகளிலும் நமது கட்சி வெற்றி பெற வேண்டும்.

பா.ஜனதா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. பெங்களூருவில் எந்த வளர்ச்சி பணியையும் செய்யாமல் அரசு பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சி நிர்வாகத்தை மக்கள் பார்த்துள்ளனர். பொதுமக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் சிறப்பான நிர்வாகத்தை நடத்துவோம்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.


Next Story