கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது..!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவு பெறுகிறது..!
Published on

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் (ஏப்ரல்) 24-ந் தேதி நிறைவு பெற்றதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்கள். குறிப்பாக ஆளும் பா.ஜனதாவினர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதுபோல் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்பதால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கர்நாடகத்தில் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், முன்னாள் பிரதமர் தேவேகவுடா 90 வயதிலும், தனக்கு உடல் நல பாதிப்பு இருந்தாலும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை (திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவு பெற இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கர்நாடகத்தில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது, தங்களது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். கர்நாடகத்தில் இன்றும் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com