ராமர் பாலம்: தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை


ராமர் பாலம்: தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை
x

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் மனு மீது பிபரவரி முதல் வாரத்தில் பதிலளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்படி, ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய பிப்ரவரி முதல் வாரம் வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்டு.

தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பால கட்டமைப்பு பாதிக்கப்படும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.


Next Story