உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தை இயக்கி வைத்தார் விமானப்படை தலைமைத் தளபதி


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தை இயக்கி வைத்தார் விமானப்படை தலைமைத் தளபதி
x

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தை விமானப்படை தலைமைத் தளபதி இயக்கி வைத்தார்.

பெங்களூரு,

இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள விமானப்படைத் தளதில் இலகு ரகப் போர்விமானம் தேஜாஸ், இலகு ரக காம்பேட் ஹெலிகாப்டர், இந்துஸ்தான் டர்போ டிரெய்னர்-40 ஆகிய மூன்று உள்நாட்டு விமான மற்றும் ஹெலிகாப்டர்களை அவர் இயக்கி வைத்தார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இவை, விரைவில் இந்திய விமானப்படையில் இணைகின்றன. புதுப்பிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தை, விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு செய்தார். விமான படை தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வடிவமைப்பாளர்கள் மற்றும் சோதனைக் குழுவினருடன் அவர் உரையாடினார்.

இந்திய விமானப்படையை போர்ப்படையாக மாற்றுவதற்கு திறன் மற்றும் படை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி விவாதித்தார். நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story