தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை
Published on

டெல்லி, 

மக்களவைக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக நாளை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு பங்கேற்கவுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com