முகத்தை பாலிதீன் பையால் மூடி நைட்ரஜன் கியாசை செலுத்தி என்ஜினீயர் தற்கொலை


முகத்தை பாலிதீன் பையால் மூடி நைட்ரஜன் கியாசை செலுத்தி என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இதய நோயால் அவதிப்பட்டதால் முகத்தை பாலிதீன் பையால் மூடி அதனுள் நைட்ரஜன் கியாசை செலுத்தி கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

மகாலட்சுமி லே-அவுட்:-

இதயநோயால் பாதிப்பு

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் விஜயகுமார்(வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விஜயகுமாருக்கு மனைவி, பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமார், இதயம் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இதய அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் மூச்சுவிடுவதில் சிரமம் உள்பட பல பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட விஜயகுமார், தனது மனைவியிடம் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, விஜயகுமாருக்கு ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கார் கண்ணாடிகளை மூடினார்

இந்த நிலையில் குருபரஹள்ளியில் உள்ள வாகன பணிமனைக்கு சென்று காரை சுத்தம் செய்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு, விஜயகுமார் காரில் புறப்பட்டு சென்றார். குருபரஹள்ளி பைப்லைன் ரோட்டில் உள்ள பூங்காவின் முன்பு காரை நிறுத்திய விஜயகுமார், அங்கு இருந்த ஒரு நபரை அழைத்து தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், அதிக வெயில் அடிப்பதால் தான் காருக்குள் சிறிது நேரம் தூங்க இருப்பதாகவும், தனது காரை, கவரை கொண்டு மூடும்படியும் கேட்டு கொண்டார்.

இதனால் அந்த நபரும் காரை கவரால் மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதன்பின்னர் காருக்குள் அமர்ந்து இருந்த விஜயகுமாரின், காரின் கண்ணாடிகளை அடைத்தார். பின்னர் ஏற்கனவே காரில் எடுத்து வந்து இருந்த நைட்ரஜன் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்ட விஜயகுமார், தனது முகத்தை பாலிதீன் பையால் மூடி மூச்சுவிட முடியாதபடி செய்தார். மேலும் பாலிதீன் பைக்குள் நைட்ரஜன் கியாசை செலுத்தினார்.

நைட்ரஜன் கியாஸ் சிலிண்டர் திறப்பு

இதனால் நச்சு காற்றால் மூச்சுவிட முடியாமல் திணறிய விஜயகுமார் காருக்குள்ளேயே இறந்தார். இந்த நிலையில் நீண்ட நேரமாக கார் ஒரே இடத்தில் நின்றதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் காருக்கு மூடப்பட்டு இருந்த கவரை அகற்றினர்.

அப்போது காரின் கதவில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் பொதுமக்கள் யாரும் என்னுடைய கார் கவரை திறக்க வேண்டாம். உள்ளே விஷ காற்று இருப்பதால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படும். போலீசார் மற்றும் திறமையான குழு எனது கார் கதவை திறக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர். மேலும் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

போலீசார் நடத்திய விசாரணையில், இதய நோயால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார், முகத்தை பாலிதீன் பையால் மூடி நைட்ரஜன் கியாசை திறந்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story