தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங்... கவர்ச்சி பாடலுக்கு மத்திய பிரதேச மந்திரி கண்டனம்...!


தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங்... கவர்ச்சி பாடலுக்கு மத்திய பிரதேச மந்திரி கண்டனம்...!
x

மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

போபால்,

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பதான் திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்து உள்ளார். இவரது ஹாட் பிகினி புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடிக்கும் போதெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பரபரப்பு ஏற்படும். அவர்கள் இணைந்து நடித்த 'ஓம் சாந்தி ஓம்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இந்த சூப்பர் ஹிட் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும் போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகாபடுகோனே 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறுகையில்,

'பதான்' திரைப்படம் முழுவதும் பல்வேறு தவறுகள் நிறைந்துள்ளது. இந்த படம் மக்கள் மனதில் நச்சு தன்மையை உருவாக அடிப்படையாகக் கொண்டது.

'பேஷாரம் ரங்' பாடலின் வரிகள் & பாடலில் அணிந்திருக்கும் காவி உடை மற்றும் பச்சை நிற ஆடைகள் திருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிடலாமா வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யும் என்றார்.

1 More update

Next Story