பாம்பின் கால் பாம்பறியும்...!! பயத்தில் பெண் வீசிய செருப்பை கவ்வி சென்ற பாம்பு; வைரலாகும் வீடியோ


பாம்பின் கால் பாம்பறியும்...!! பயத்தில் பெண் வீசிய செருப்பை கவ்வி சென்ற பாம்பு; வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 26 Nov 2022 7:26 AM GMT (Updated: 26 Nov 2022 7:37 AM GMT)

பெண் ஒருவர் பாம்பை விரட்ட நினைத்து, வீசிய ஒரு செருப்பை இரையாக கவ்வி கொண்டு பாம்பு சென்ற வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


புதுடெல்லி,


விலங்கு, பறவையினங்கள் போன்று ஊர்வனவற்றில் வருபவை பாம்புகள். இவற்றுக்கு கால்கள் இல்லாத சூழலில் ஊர்ந்து செல்ல கூடியவை. பாம்பென்றால் படையும் நடுங்கும். பாம்பின் கால் பாம்பறியும் போன்ற பழமொழிகள் அவற்றை பற்றி நம்மூரில் கூறப்படுபவை.

இந்த நிலையில், பாம்பு ஒன்று வீட்டின் முன்னால் ஊர்ந்து செல்கிறது. அதனை பெண் ஒருவர் விரட்டுவதற்காக செருப்பை வீசுகிறார். இதுபற்றி, இந்திய வன துறை அதிகாரியாக உள்ள பர்வீன் கஸ்வான் வெளியிட்டு உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பாம்பை விரட்ட பெண் செருப்பை வீசியதும், டக்கென்று பாம்பு அதனை வாயில் கவ்வி கொண்டது. இரையென நினைத்து சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்ற பாம்பை உடன் இருந்தவர்கள் விரட்டியுள்ளனர்.

இதனால், செருப்பை கவ்வியபடியே இரை கிடைத்த சந்தோசத்தில் அந்த பாம்பு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து (ஊர்ந்து) வேகமுடன் புதர் பகுதியை நோக்கி சென்றது.

இதனை பார்த்த, தனது ஒரு செருப்பை வீசிய பெண் கத்தி கூச்சலிடுகிறார். அருகேயிருக்கும் மற்றொரு பெண் அடக்க முடியாமல் சிரிக்கிறார். பாம்பு இரையுடன் (செருப்புடன்) பக்கத்தில் புதர் மண்டியிருந்த பகுதிக்குள் சென்று மறைகிறது.

இந்த வீடியோவை வெளியிட்டு, அதில் இந்த செருப்பை வைத்து பாம்பு என்ன செய்யும் என்று எனக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. அதற்கு கால்கள் இல்லை. தெரியாத இடம் என்று பஸ்வான் தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரில் வெளியான வீடியோ ஏறக்குறைய 4 லட்சம் முறை பார்வையிடப்பட்டு உள்ளது. 9 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ஒருவர், ரப்பர் செருப்பின் வாசனை அல்லது சுவையை வைத்து அதனை கவ்வி கொண்டு சென்றிருக்க கூடும் என கணிப்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த பாம்பு ஏதோ கட்டுவதற்காக அதனை எடுத்து செல்வது போல் உள்ளது. அது ஒரு கோட்டையாக கூட இருக்கலாம். ஆனால், ரொம்ப மனமகிழ்ச்சியாக அது செல்கிறது.

நடனம் ஆடியபடியும், தலையை முன்னும், பின்னும் அசைத்தபடியும் செல்கிறது. கால்கள் இல்லையாதலால் டான்சிங்கிற்கு பதிலாக அது பிரான்சிங் (துள்ளலான நடை) செய்கிறது என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.

எனினும், கால்கள் இல்லாத பாம்பு அந்த ஒற்றை செருப்பை எடுத்து கொண்டு போய் என்ன செய்ய போகிறது? இந்த பெண், தன்னிடம் உள்ள ஒரு செருப்பை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்? என்பது நெட்டிசன்களின் ஆச்சரியம் நிறைந்த கேள்வியாக உள்ளது. ஒருவேளை பாம்பின் கால் பாம்பறியும் என்று இதற்காகதான் முன்பே கூறி வைத்திருக்கிறார்கள் போலும்.Next Story