சிறுமிக்கு பாலியல் தொல்லை; உறவினரிடம் போலீஸ் விசாரணை


சிறுமிக்கு பாலியல் தொல்லை; உறவினரிடம் போலீஸ் விசாரணை
x

பண்ட்வால் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா அல்லிபேட்டை பகுதியை சேர்ந்த சிறுமியும், ஒரு சிறுவனும் பெற்றோரை இழந்து பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களது பாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதையடுத்து அந்த சிறுமியும் அவளது சகோதரனும் அந்தப்பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்த நிலையில் சிறுமிக்கு அவரது உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி வெளியே யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் சிறுமியிடம் கேட்டனர்.

அப்போது உறவினர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் உறவினர் பராமரிப்பில் இருந்த சிறுமியையும், அவரது சகோதரனையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரிடம் விசாரித்து வருகிறார்கள்.


Next Story