திடீரென முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்.. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி...!


திடீரென முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்.. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி...!
x

கோப்புப்படம்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான இணையதள சேவை முடங்கியதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை,

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரெயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு சேவை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடந்த அரை மணி நேரமாக சேவைகள் முடங்கி உள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'தொழில்நுட்ப காரணங்களால் இ-டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினர் இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் முன்பதிவு இணையதள சேவை தொடங்கப்படும்' என்று அறிவித்துள்ளது.


Next Story