ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை; கிராம மக்கள் பீதி


ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை;  கிராம மக்கள் பீதி
x

ஆட்டை, சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் (தாலுகா) கொண்டபாலு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். விவசாயியான. இவர் வீட்டின் பின்புறம் இருந்த தொழுவத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று இரைதேடி நுழைந்தது. பின்னர் சிறுத்தை, நடராஜின் தொழுவத்தில் புகுந்து ஒரு ஆட்டை அடித்து கொன்றது.

இதைதொடர்ந்து மற்ற ஆடுகளை, சிறுத்தை வேட்டையாட முயன்றது. இந்த சத்தம் கேட்ட உரிமையாளர் நடராஜ் ஓடி வந்து பார்த்தார். அப்போது தொழுவத்தில் சிறுத்தை நின்றது. இதை பார்த்த நடராஜ் உடனே அந்த சிறுத்தையை அங்கிருந்து துரத்திவிட்டார். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்ைக எடுத்து வருகின்றனர்.



Next Story