கிராமத்தில் புகுந்த நரியை அடித்து கொன்ற மக்கள்
கிராமத்தில் புகுந்த நரியை அடித்து கொன்ற மக்களால் பரபரப்பு.
கதக்:-
கதக் மாவட்டம் கஜேந்திரகடா தாலுகா லம்பானிதாண்டா கிராமத்திற்குள் நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு நரி புகுந்தது. கிராமத்தில் அங்கும், இங்கும் உலா வந்த நரி திடீரென கிராமத்தை சேர்ந்த மகாந்தேஷ், பரசப்பா, சங்கர் ஆகியோரை தாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அந்த நரியை கம்பு, கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த நரி பரிதாபமாக செத்தது. இதுபற்றி அறிந்ததும் அங்கு சென்ற வனத்துறையினர் நரியின் உடலை எடுத்து சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் நரி குழிதோண்டி புதைக்கப்பட்டது. வெறிநாய் கடித்ததால் நரி, கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
Related Tags :
Next Story