பாதயாத்திரை நோக்கம் வாக்குகளை கவர அல்ல; அது அரசியல் கடந்தது: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி


பாதயாத்திரை நோக்கம் வாக்குகளை கவர அல்ல; அது அரசியல் கடந்தது: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
x

நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது மறந்து போன வீடு, வீடாக சென்று தொடர்பு கொள்ளும் நிகழ்வை பாதயாத்திரை ஊக்குவிக்கும் என ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.புனே,


மராட்டியத்தின் வாஷிம் நகரில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு (பொறுப்பு) பொது செயலாளராக உள்ள மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கும், வாக்கு வங்கி அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

அதன் நோக்கங்கள் அரசியல் கடந்தது. இது ஓர் அரசியல் கட்சியின் பாதயாத்திரை. அரசியல் விசயங்களை உள்ளடக்கியது. ஆனால், வாக்குகளை பெறுவதற்காக அல்ல.

இந்த பாதயாத்திரை, ஒற்றுமையை ஊக்குவிக்கும். எங்களுடைய கட்சியை அது இணைத்திருக்கிறது. இதன் பின்விளைவுகள், ஏதேனும் இருக்குமென்றால், அது 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நாங்கள் மறந்து போன வீடு, வீடாக சென்று தொடர்பு கொள்ளும் நிகழ்வை இந்த பாதயாத்திரை ஊக்குவிக்கும். அதிகாரத்தில் இருந்தபோது, அதனை நாங்கள் மறந்து விட்டோம். அதனை, இந்த பாதயாத்திரையின் வழியே தற்போது நாங்கள் நினைவுகூர்கிறோம் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.


Next Story