போலீசாரை தாக்கிய ரவுடி தமிழ்நாட்டில் சிக்கினார்
போலீசாரை தாக்கிய ரவுடி தமிழ்நாட்டில் சிக்கினார்
பெங்களூரு: சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் வாகன பதிவு எண் இல்லாத ஸ்கூட்டரில் சுற்றிய ரவுடி விஜயை, கிரிநகர் போலீஸ்காரர்கள் கிரண், நாகேந்திரா ஆகியோர் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது மிளகாய் பொடி தூவி விட்டு, அவர்களை தாக்கிவிட்டு ரவுடி விஜய் தப்பி ஓடி இருந்தார்.
இந்த நிலையில், ரவுடி விஜய் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு சென்று விஜயை கைது செய்துள்ளனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து கிரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடி விஜய் மீது கொலை முயற்சி, கொள்ளை, தாக்குதல் உள்ளிட்ட பல வழக்குகள் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story