அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகார் விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2008-ஆம் ஆண்டு அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது அரசு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட் வழக்கை சந்திக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story