சாலை தடுப்பு சுவரில் மோதி டேங்கர் லாரி தீப்பிடித்தது

துமகூரு அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.
சாலை தடுப்பு சுவரில் மோதி டேங்கர் லாரி தீப்பிடித்தது
Published on

துமகூரு:

துமகூரு அருகே கூலூரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வேகமாக தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. உடனே லாரி தீப்பிடித்து எரிந்தது.

லாரி கவிழ்ந்ததும் டிரைவரும், கிளீனரும் வெளியே வந்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் உயிர் தப்பினர். இந்த தீவிபத்தில் டேங்கர் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. விபத்து தொடர்பாக துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com