விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x

விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சக்லேஷ்புரா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பயங்கர சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி நேற்று இரவு காட்டுயானைகள் கூட்டமாக சக்லேஷ்புரா வனப்பகுதியைவிட்டு வெளியேறின. பின்னர் அவைகள் சக்லேஷ்புரா தாலுகாவிற்கு உட்பட்ட கீரிஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், விளைநிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்தின. நெற்பயிர்களை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தின. பாக்கு மரங்கள் மற்றும் தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தின.

காபி மற்றும் வாழை தோட்டங்களையும் காட்டுயானைகள் விட்டுவைக்கவில்லை. இதனால் கிராமத்தைச் சேர்ந்த ரத்னம்மா, மோகன், ஜெயராஜ், மஞ்சுநாத், ராஜு, சோமசேகர், சீனிவாஸ் ஆகியோரது விளைநிலங்கள் நாசமாகின. இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறையினரிடம் தெரிவித்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story