கவர்னர்களை நியமிக்கும் விவகாரத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்: உத்தவ் தாக்கரே
கவர்னர்களை நியமனம் செய்வதில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
கவர்னர்களை நியமனம் செய்வதில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது: சத்ரபதி சிவாஜி, ஜோதிபா பூலே உள்ளிட்டோரை அவமதிக்கும் வகையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பேசியுள்ளார். கவர்னர் என்பவர் ஜனாதிபதியின் பிரநிதி மட்டுமே. எனவே இவரை நியமிப்பதில் விதிகள் வகுக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டும்.
கர்நாடகாவில் உள்ள பெல்காம் மராட்டியத்திற்கு சொந்தமானது. அங்கு மராட்டிய மொழி பேசும் மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். இதுபோல பல பகுதிகளை நாம் கர்நாடகாவிடம் இழந்து விட்டோம். கர்நாடகாவுடனான எல்லை பிரச்சினை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் இவ்விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே அமைதி காக்கிறார்" என்றார்.
Related Tags :
Next Story