தெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையர்கள்..!


தெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையர்கள்..!
x

தெலுங்கானாவில் எம்.பி.யின் மகனை ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்ய வற்புறுத்தி கத்திமுனையில் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. நாம நாகேஸ்வர ராவ். இவரது மகன் பிரித்வி தேஜா. இவர் நேற்று போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது;-

"காரில் தோலிசோவ்கி மெயின்ரோட்டில் கடந்த 30-ந்தேதி பயணித்தபோது 2 பேர் காருக்கு முன்பாக பைக்கை நிறுத்தி வழிமறித்தனர். நான் காரை நிறுத்தியதும் அவர்கள் காருக்குள் நுழைந்து மது அருந்தினர். பின்னர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். இருவரும் என்னை தாக்கியபடி ஆன்லைன் வழியாக ரூ.75 ஆயிரம் பணம் அனுப்பும்படி வற்புறுத்தினார்கள்.

சிறிது நேரத்தில் அவர்களுடன் மூன்றாம் நபர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். பின்னர் அவர்களில் ஒருவன் காரை தாறுமாறாக ஓட்டி பல வாகனங்களை இடித்தபடி சென்றான். பிறகு என்னை காரை ஓட்டச்சொன்னான். பஞ்சகுட்டா போலீஸ் நிலையம் அருகே வந்ததும் அவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்." இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

1 More update

Next Story