17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்...!
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் ஜனவரி 1ஆம் தேதி, 18 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 17 வயது நிரம்பியவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story