சூரத்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம்; பரத் ஷெட்டி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

சூரத்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையத்தை பரத் ஷெட்டி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சூரத்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம்; பரத் ஷெட்டி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Published on

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அந்தப்பகுதி மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய மங்களூருவுக்கு சென்று வரும் நிலை இருந்தது.

இதனால் சூரத்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி சூரத்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், பரத் ஷெட்டி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி டிக்கெட் முன்பதிவு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், மங்களூரு வடக்கு சட்டசபை தொகுதியில் உள்ள ஒரே ரெயில் நிலையம் சூரத்கல் ரெயில் நிலையம் தான். இதனை ஸ்மார்ட் ரெயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com