மைசூருவில் டி.கே.சிவக்குமார் தெருமுனை பிரசாரம்


மைசூருவில் டி.கே.சிவக்குமார் தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 PM IST (Updated: 21 Feb 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் டி.கே.சிவக்குமார் தெருமுனை பிரசாரம் செய்தார்

மைசூரு,

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். சித்தராமையா வட கர்நாடக மாவட்டங்களிலும், டி.கே.சிவக்குமார் தென் கர்நாடக மாவட்டங்களில் பிரசாரம் நடத்தி வருகிறார்கள். நேற்று டி.கே.சிவக்குமார், மைசூருவில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவர் பன்னூர், டி.நரசிப்புரா, நஞ்சன்கூடு தாலுகாக்களில் தெருமுனை பிரசாரம் (ரோடு ஷோ) நடத்தினார். மைசூரு வந்த டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வழிநெடுகிலும் திரண்டு வந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

1 More update

Next Story