கொரோனாவுக்கான மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மருந்து நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்
மத்திய சுகாதரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் இன்று மத்திய சுகாதரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.அதில் ,
சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், கொரோனா மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மன்சுக் மான்டவியா மருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story