மைசூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கடும் போக்குவரத்து நெரிசல்


மைசூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்; கடும் போக்குவரத்து நெரிசல்
x

தொடர் விடுமுறை காரணமாக மைசூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மைசூரு:

தொடர் விடுமுறை காரணமாக மைசூருவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் குடும்பம், குடும்பமாக சுற்றுலா சென்று வருகிறார்கள். இதேபோல், கர்நாடகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மைசூருவுக்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மைசூருவில் அரண்மனை, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், செயின்ட் பிலோமினா தேவாலயம், மிருககாட்சி சாலை, பொருட்காட்சி, கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

போக்குவரத்து நெரிசல்

மைசூரு நகரில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வாகன நெரிசலாக தான் காணப்படுகிறது. மைசூரு அரண்மனையில் வாகன நிறுத்த இடமிடல்லாததால் அரண்மனை முன்பு உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

மேலும் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால், நகரில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பலர் அறை கிடைக்காமல் வாகனங்களிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story