முல்லையன்கிரி மலைக்கு வருகிற 13-ந்தேதி சுற்றுலா பயணிகள் வர தடை
முல்லையன்கிரி மலைக்கு வருகிற 13-ந் தேதி சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டா் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இன்று(திங்கட்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் ஸ்ரீராமசேனை தொண்டர்கள் தத்தா குகைக்கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க உள்ளனர்.
வருகிற 13-ந்தேதி சிக்கமகளூருவில் தத்தா ஜெயந்தி ஊர்வலம் நடத்தி, குகைக்கோவிலுக்கு வந்து தத்தா பாதத்ைத தரிசனம் செய்து ஆன்மிக சொற்பொழிவு நடத்துகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு, போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் தத்தா குகைக்கோவில் அருகே உள்ள பாபாபுடன்கிரி, முல்லையன்கிரி, மாணிக்கதாரா அருவி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story