கார் மீது லாரி மோதல்; 3 கல்லூரி மாணவிகள் படுகாயம்
மணிப்பால் அருகே கார் மீது லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மங்களூரு;
உடுப்பி மாவட்டம் மணிப்பால் டவுனில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் நேற்றுமுன்தினம் காரில் வெளியே சென்று உள்ளனர். அப்போது அவர்கள் சந்தேகட்டே பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த லாரி திடீரென காா் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் ெநாறுங்கியது. இதில் காரின் இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 3 மாணவிகளும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் இருந்த சமூக ஆர்வலர்கள் சிலர், உடனடியாக இடுபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்டு மணிப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.