லாரி -மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பரிதாப சாவு


லாரி -மோட்டார் சைக்கிள் மோதல்;  வாலிபர் பரிதாப சாவு
x

லாரி -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

பெங்களூரு :பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், மோட்டார் சைக்கிளிலும் மோதி கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் நெலமங்களா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் நெலமங்களாவை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35) என்பது தெரியவந்தது.


Next Story