ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் கயிறு இழுக்கும் போட்டிகள் - கேரளா வனத்துறை அதிரடி உத்தரவு


ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் கயிறு இழுக்கும் போட்டிகள் - கேரளா வனத்துறை அதிரடி உத்தரவு
x

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கயிறு இழுக்கும் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த நிலையில் கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு வளர்ப்பு யானைகளை பயன்படுத்தக்கூடாது என்று கேரளா வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி யானைகளை பயன்படுத்தினால் ரூ.50 ஆயிரம் அபராதமும் 2 வருட சிறைதண்டனையும் கிடைக்கும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story