கர்நாடகா: லாரி மீது ஜீப் மோதி விபத்து - பிரதமர் இரங்கல்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

துமகுரு மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகா: லாரி மீது ஜீப் மோதி விபத்து - பிரதமர் இரங்கல்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா பகுதி அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் ஒன்று வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து நெஞ்சை உலுக்கியது, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து கொண்டார்.

துமகுரு சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com