சிவசேனாவை அழிக்க நடக்கும் சதியே இது: சஞ்சய் ராவத் கைது குறித்து உத்தவ் ஆவேசம்


சிவசேனாவை அழிக்க  நடக்கும் சதியே இது: சஞ்சய் ராவத் கைது குறித்து உத்தவ் ஆவேசம்
x

கோப்பு படம்

தினத்தந்தி 1 Aug 2022 5:11 PM IST (Updated: 1 Aug 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

பழிவாங்கும் மனநிலையுடன் அரசியல் நடந்து கொண்டிருப்பதாக உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்து பேசினர்.

மும்பை,

குடிசை சீரமைப்பு திட்ட நில மோசடியில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நள்ளிரவில் அவரை கைது செய்தது. இதையடுத்து, இன்று மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்செய் ராவத்தை அமலாக்கத்துறை ஆஜர் செய்தது.

சஞ்செய் ராவத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்ற நீதிமன்றம், சஞ்செய் ராவத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதன்படி வரும் நான்காம் தேதி வரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில், சஞ்செய் ராவத் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, சிவசேனாவை அழிக்கும் முயற்சியே சஞ்செய் ராவத்தின் கைது என சாடியுள்ளார். மேலும்,சஞ்செய் ராவத்தை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் நமக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை நாம் அழிக்க வேண்டும் என்ற மனநிலையுடன் பழிவாங்கும் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது எனவும் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடினர்.


Next Story