விஜயகாந்த் மறைவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல்

விஜயகாந்த், தனது திரை வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல்
Published on

புதுடெல்லி,

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தே.மு.தி.க. தலைவரும், மதிப்பிற்குரிய மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 'கேப்டன்' என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த், தனது திரை வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com