உள்நாட்டில் ஹைட்ரஜன் சென்சார் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: மந்திரி ஜிதேந்திர சிங்


உள்நாட்டில் ஹைட்ரஜன் சென்சார் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: மந்திரி ஜிதேந்திர சிங்
x

தேசிய ஹைட்ரஜன் இயக்கம் 2030-ம் ஆண்டுக்குள், 50 லட்சம் டன் ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய உதவும் என்று அவர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஹைட்ரஜன் புத்தொழில்(ஸ்டார்ட் அப்) நிறுவனங்களுக்கு, ரூ.3.29 கோடி நிதியுதவியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி டாக்டர்.ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

தற்போது, சென்சார்களை இறக்குமதி செய்வதை பெரிதும் சார்ந்துள்ளது, ஏனெனில் அனைத்து முக்கிய சென்சார் கூறுகளும் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஹைட்ரஜன் சென்சார்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஆதரிக்க, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மல்டி நானோ சென்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், ஹைட்ரஜன் உணர்திறன் மற்றும் பகுப்பாய்வு தொழில் நுட்பத்தின் உள்நாட்டு வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர்.ஜிதேந்திரசிங் பேசும்போது, "கடந்த ஆண்டு 75-வது சுதந்திரதினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில், டெல்லி செங்கோட்டையிலிருந்து தொடங்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தின்கீழ், ஹைட்ரஜன் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஹைட்ரஜன் இயக்கம், அதன் பருவநிலை இலக்குகளை எட்டுவதையும், இந்தியாவை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற அரசாங்கத்துக்கு உதவி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

இது 2030-ம் ஆண்டுக்குள், 50 லட்சம் டன் ஹைட்ரஜன் உற்பத்தியை செய்யவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தவும் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story