24-வது உலக தேங்காய் தினம்: குஜராத்தில் தொடங்கி வைக்கிறார் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர்


24-வது உலக தேங்காய் தினம்: குஜராத்தில் தொடங்கி வைக்கிறார் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர்
x

செப்டம்பர் 2-ஆம் தேதி 24-வது உலக தேங்காய் தின கொண்டாட்டங்களுக்கு தேங்காய் மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி:

செப்டம்பர் 2-ஆம் தேதி 24-வது உலக தேங்காய் தின கொண்டாட்டங்களுக்கு தேங்காய் மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. "மேம்பட்ட எதிர்காலத்திற்கும், வாழ்க்கைக்கும் தேங்காய் வளர்ப்பு" என்பது இந்த ஆண்டு உலகத் தேங்காய் தினத்தின் கருப்பொருளாகும்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களை மத்திய வேளாண்மை மந்திரி நரேந்திர சிங் தோமர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து, விவசாயிகளிடையே உரையாற்றுவார்.

இது தவிர, ஜுனாகத்தில் வாரியத்தின் மாநில மையத்தை திறந்து வைக்கும் மந்திரி தேசிய விருதுகளையும், சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளையும் அறிவிப்பார்.

அதே நாளன்று கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் இணை மந்திரி கைலாஷ் சவுத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்குவார்.

உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு 'தேங்காய் வளர்ப்பில் சிறந்த வேளாண்மை நடைமுறைகள்' என்ற சர்வதேச பயிலரங்கும் நடைபெறும். தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ள சுமார் 7 முக்கிய நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.


Next Story