மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மங்கோலியா பயணம்

இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று மங்கோலியா பயணம்
Published on

புதுடெல்லி,

கிழக்கு ஆசிய நாடுகளுடனான கேந்திர கூட்டுமுயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முதல் வருகிற 7-ந்தேதி வரை அரசுமுறைப் பயணமாக மங்கோலியா செல்கிறார். இந்திய பாதுகாப்பு மந்திரி ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும். தமது பயணத்தின் போது மங்கோலியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி லெப்டினன்ட் ஜெனரல் சைகான்பயருடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்கிறார்.

மங்கோலிய அதிபர் யூ. குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற சபைத் தலைவர் ஜி. ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுகிறார். இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்ய உள்ளார்கள். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com