அடுத்த 2 ஆண்டுகளில் விமான போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்


அடுத்த 2 ஆண்டுகளில் விமான போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்
x

இந்திய விமான போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்திய விமான போக்குவரத்து துறையில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதிப்பீடுகளுக்கான நாடாளுமன்ற குழுவிடம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விமான போக்குவரத்து மற்றும் விமான உற்பத்தி துறையில் தற்போதைய நேரடி வேலைவாய்ப்பில் சுமார் 2,50,000 பணியாளர்கள் உள்ளனர். இந்த 2,50,000 எண்ணிக்கையில் விமானிகள், கேபின் பணியாளர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு, நிர்வாக மற்றும் விற்பனை ஊழியர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

2024-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,50,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story