முகத்தில் உதை, பெல்ட்டு, செருப்பால் அடி: மதுபோதையில் நடுரோட்டில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்


முகத்தில் உதை, பெல்ட்டு, செருப்பால் அடி: மதுபோதையில் நடுரோட்டில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்
x

மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் மற்றொரு பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.

போபால்,

மத்தியபிரதேசம் இந்தூர் மாவட்டம் தனு மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இளம்பெண் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

அந்த இளம்பெண் கடந்த 4-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் என்ஐஜி சந்திப்பு பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றார்.

அப்போது, கேளிக்கை விடுதியில் மதுக்குடித்துவிட்டு போதையில் வந்த இளம்பெண்கள் 4 பேர் அந்த பெண் மீது திடீரென சரமாரி தாக்குதல் நடத்தினர். 4 இளம்பெண்களும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர்.

செருப்பு, பெட்டை கொண்டு அந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நடுசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. அந்த பெண்ணின் செல்போனை உடைத்த பெண்கள் முகம், கை,கால்களில் சரமாரியாக உதைத்து தாக்குதல் நடத்தி நடுரோட்டில் தரதரவென இழுத்தனர்.

இளம்பெண் மீது 4 இளம்பெண்கள் சரமாரி தாக்குதல் நடத்துவதை அருகில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.

இதனை தொடர்ந்து தன் மீது தாக்குதல் நடத்திய 4 இளம்பெண்கள் மீதும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து மதுபோதையில் நடுரோட்டில் இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய மேஹா மல்வியா, டினா சோனி, பூனம் அஹிர்வார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அதில், ஒரு பெண்ணை போலீசார் அழைத்து சென்றபோது செய்திசேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தினார்.

மதுபோதையில் இளம்பெண்கள் 4 பேர் நடுரோட்டில் மற்றொரு பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.






Next Story