குழந்தைகளை விட்டு விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி தேடிப்பிடித்து கொலை செய்த சகோதரர்கள்
குழந்தைகளை விட்டு விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி தேடிப்பிடித்து கொலை செய்த சகோதரர் போலீசில் சரணடைந்தார்.
பாக்பத்
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அருகே உள்ள ஆசாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிப் (30) திருமணமானவர். அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான மஹ்ஜபீன் (27) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
ஆரிப் கிராமம் கிராமமாக அழகுசாதனப் பொருட்களை விற்று வந்தார். ஆரிபுக்கு 3 பெண் குழந்தைகளும், மஹ்ஜபீனுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி விட்டனர். இருவரும் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்தனர். மேலும் இருவரையும் உறவினர்கள் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இருந்வரும் மீரட் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
மஹ்ஜபீன் சகோதரர்கள் இருவரையும் கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.இரவில், சிறுமியின் சகோதரர்கள் இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்களை கொலை செய்தனர்.
ஆரிப்பின் உடலை சப்ராலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லம்ப் கிராமத்திலும், மஹ்ஜபீன் உடலை அசரா கிராமத்தின் காட்டிலும் வீசி எறிந்தனர்.இருவரையும் கொன்றுவிட்டு, சிறுமியின் சகோதரர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது போலீசார் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.