அமெரிக்க உயர்மட்டக்குழு 30-ந்தேதி இந்தியா வருகை


அமெரிக்க உயர்மட்டக்குழு 30-ந்தேதி இந்தியா வருகை
x

கோப்புப்படம்

பொருளாதார, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க உயர்மட்டக்குழு வரும் 30-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதாரம், அறிவியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க உயர்மட்டக்குழு ஒன்று வருகிற 30-ந்தேதி இந்தியா வருகிறது.

அமெரிக்க செனட்டர் ஜான் ஓசோப் தலைமையிலான இந்த குழுவினர் 30-ந்தேதி மும்பை வருகின்றனர். 8 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் அவர்கள் அடுத்த மாதம் 6-ந்தேதி டெல்லியில் இருந்து நாடு திரும்புகிறார்கள். இந்த பயணம் குறித்து ஜான் ஓசோப் கூறுகையில், 'இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் செல்லும் அமெரிக்க குழுவுக்கு நான் தலைமை தாங்குகிறேன். இந்த பயணத்தின்போது இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர்களை சந்திக்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.

செனட் சபைக்கு ஓசோப் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜியா மாகாணத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் இந்திய சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து இருந்த அவர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் அவசியத்தையும் அதில் சுட்டிக்காட்டி இருந்தார்.


Next Story