உத்தரபிரதேசம்; தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

காசியாபாத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
image courtesy; ANI 
image courtesy; ANI 
Published on

காசியாபாத்,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொழிற்சாலையின் பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனில் எற்பட்டுள்ளது. இதனால் தீ மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலையை சுற்றி நின்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர். தீ விபத்து எற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால் பெருமளவில் பொருட்சேதம் எற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com