உத்தரபிரதேசம்: இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண்


உத்தரபிரதேசம்: இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண்
x

இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்ஸா பெற்றுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மிர்ஸாபூரைச் சேர்ந்தவர் ஷாகித் அலி. தொலைக்காட்சி பழுது பார்க்கும் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சானியா மிர்ஸா இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்ஸா பெற்றுள்ளார். இந்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 400 இடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்ட நிலையில், போர் விமானங்களை இயக்கும் பிரிவில் பெண்களுக்காக 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதன்படி தேர்வு எழுதி அதில் சானியா மிர்ஸா அதில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய விமானப்படையின் முதல் பெண் பைலட் அவ்னி சதுர்வேதி போல் வரவேண்டும் என்பதே தனது மகளின் லட்சியமாக இருப்பதாக சானியா மிர்ஸாவின் தந்தை ஷாகித் அலி பெருமையுடன் தெரிவித்தார்.



1 More update

Next Story