உத்தரபிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை கார் விபத்தில் 4 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை கார் விபத்தில்  4 பேர் பலி
x

உத்தரபிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தின் மதுராவை சேர்ந்தவர் ஒருவருக்கு நொய்டாவில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடித்து குடும்பத்தினருடன், புதுமணத்தம்பதி காரில் மதுரா திரும்பினர்.

இந்த கார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. சுரிர் போலீஸ் நிலைய பகுதியில் வந்தபோது திடீரென மற்றொரு வாகனத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

இதில் மணப்பெண்ணின் தந்தை மற்றும் 4 வயது சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். புதுமணத்தம்பதி உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்த விபத்து சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story