உத்தரபிரதேசத்தில் காசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
காசி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டி நேற்று பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் தடம் புரண்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்ற காசி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டி நேற்று பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட பெட்டியை பிரித்து விட்டு மற்றொரு பெட்டியை இணைத்தனர்.
இந்த சம்பவத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று பிரயாக்ராஜ் கோட்ட ரெயில்வே அதிகாரி தெரிவித்தார். காசி எக்ஸ்பிரஸ் 3 மாநிலங்கள் வழியாக செல்லும் மிக நீண்ட தூர ரெயில்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story